சுடச் சுடச் செய்திகள்

லண்டனின் முதல் முஸ்லிம் மேயர்

லண்டன்: தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சாதிக் கான், 45 (படம்), லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 57%, அதாவது 1,310,143 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்ட பெரும் பணக்காரர் ஸாக் கோல்ட்ஸ்மித்திற்கு 994,614 வாக்குகள் கிட்டின. இங்கிலாந்து வரலாற்றிலேயே அதிக வாக்குகள் பெற்ற அரசியல்வாதி என்ற பெருமையையும் சாதிக் பெற்றார். பாகிஸ்தானியக் குடியேறிகளின் மகனான சாதிக் ‘ஐஎஸ்’ அமைப்பின்பால் கருணைகொண்டவர் என்று பிரதமர் டேவிட் கேமரன் உட்பட எதிர்க்கட்சியினர் பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையிலும் அதை மீறி வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் எம்.பி.யும் அமைச்சருமான இவர், “பயத்தை விடுத்து நம்பிக்கையை லண்டன்வாசிகள் தேர்வு செய்தது கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon