கெய்ரோ: 8 போலிஸ்காரர்கள் சுட்டுக்கொலை

கெய்ரோ: கெய்­ரோ­வின் தெற்­குப் பகு­தி­யில் உள்ள ஹெல்­வன் என்­னு­மி­டத்­தில் சென்­று­கொண்­டி­ருந்த போலிஸ் வாக­னம் ஒன்­றின் மீது அடை­யா­ளம் தெரி­யாத நான்கு துப்­பாக்­கிக்­கா­ரர்­கள் சர­மா­ரி­யா­கச் சுட்­ட­தில் 8 போலிஸ்­கா­ரர்­கள் கொல்­லப்­பட்­ட­னர் என்று அந்­நாட்டு உள்­துறை அமைச்சு தனது ஃபேஸ்­புக் இணை­யத் தளத்­தில் தெரி­வித்­தது. தாக்­கு­த­லில் ஈடு­பட்ட துப்­பாக்­கிக்­கா­ரர்­கள் அனை­வ­ரும் முக­மூடி அணிந்­தி­ருந்த­தாக அப்­ ப­கு­தி­யில் வாழும் சிலர் ராய்ட்­டர் செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­ய­தா­கத் தெரி­கிறது. இந்தத் தாக்­கு­தலை எந்த பயங்க­ர­வா­தக் குழுக்­களைச் சார்ந்த­வர்­கள் மேற்­கொண்ட­னர் என்­பது உட­ன­டி­யா­கத் தெரி­ய­வில்லை.

எகிப்து நாட்­டின் சினா­யின் வடக்­குப் பகு­தியைத் தள­மா­கக் கொண்டு இயங்கி வரு­கின்ற­னர் கிளர்ச்­சி­யா­ளர்­கள். இவர்­கள் 2013ஆம் ஆண்டு முதல் ஏரா­ள­மான எகிப்­திய ராணு­வத்­தி­னரை­யும் காவல்­துறை­யி­னரை­யும் கொன்று குவித்­துள்­ள­னர். சினா­யில் நடந்த கொடூ­ரத் தாக்­கு­த­லின்­போது பயங்க­ர­வா­தி­கள் பாது­காப்­புப் படையைக் குறிவைத்து கெய்­ரோ­வி­லும் மற்ற நக­ரங்களி­லும் வெடி­குண்டு வைத்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!