சிரியா: அலெப்போ நகருக்கு திரும்பும் மக்கள்

அலெப்போ: வடசிரியாவில் கடுமை யான போர் நடக்கும் அலெப்போ நகரில் அங்குள்ள அரசாங்க எதிர்ப்புப் போராளிகள் கட்டுப்பாட் டின்கீழ் இருக்கும் பகுதிகளுக்கு மக்கள் திரும்ப ஆரம்பித்து விட் டனர். அங்கு அரசாங்கப் படை யினருக்கும் அரசாங்க எதிர்ப்பு போராளிகளுக்கும் இடையேயான போர்நிறுத்தம் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட பின் பொதுமக்களில் பலர் மெது மெதுவாக அங்கு திரும்பி வருவதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறுகிறது.

சிரியாவின் அலெப்போ நகரில் பொதுமக்களில் 300க்கும் மேற் பட்டவர்கள் இறந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை போர் நிறுத் தம் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இரு தரப் பினரும் தாக்குதலை நிறுத்தியதில் சற்றே நிம்மதியடைந்த பொது மக்கள் அலெப்போவின் கிழக்குப் பகுதிகளுக்கு திரும்ப ஆரம்பித் துள்ளனர். “உறவினர்கள் இங்கு அமைதி திரும்பிவிட்டதாகக் கூறியதால் நான் திரும்பி வர முடிவு செய் துள்ளேன். இங்கு பேரழிவு நிகழ்ந்ததால் நாங்கள் இந்த இடத்தைவிட்டுச் சென்றோம்.

“நம்ப முடியாத அளவுக்கு இங்கு ஆகாயத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன,” என்று ஆறு பிள்ளைகளுக்கு தந்தையான அபு முகமது என்பவரை சுட்டி ஏஎஃப்பி தகவல் தெரிவிக்கிறது. சிரியாவில் ஐந்து ஆண்டுகளாக நடக்கும் உள்நாட்டுப் போரில் இதுவரை 270,000க்கும் அதிகமா னோர் இறந்ததுடன் மில்லியன் கணக்கானோர் குடிபெயர்ந்துள் ளனர். அலெப்போ நகரில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக மூடிக் கிடந்த பள்ளிகள் தற்பொழுது திறந்துவிடப்பட்டுள்ளன. “இங்கு குண்டுமழை பொழிந்த தால் எங்கள் பெற்றோருக்கு அச்சம் ஏற்பட்டு நாங்கள் பள்ளிக் குச் செல்வதை நிறுத்தினர்,” என ஒரு பள்ளிச் சிறுவன் ஏஎஃப்பி நிறுவனத்திடம் விளக்கினான்.

 

போராளிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் பகுதிகளுக்கு மக்கள் திரும்பினர். அலெப்பா பகுதியில் பள்ளிகளும் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கிவிட்டன. படம்: ஏஎப்பி