பிலிப்பீன்ஸில் தேர்தல் பதற்றம்; விழிப்புநிலையில் பாதுகாப்புப் படை

மணிலா: பிலிப்பீன்ஸில் இன்று அதிபர் தேர்தல். எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் தேர்தலைப் பாதுகாப்புடன் நடத்தி முடிக்க ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பல வழிகளில் வாக்குகள் விலை கொடுத்து வாங்கப்படுவதாக தேர்தல் ஆணையர் லுயி கையா செய்தியாளர்களிடம் கவலை தெரிவித்துள்ளார். பணம், மளிகைச் சாமான்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இப்படி பல விதங்களில் வாக்குகள் விலைக்கு வாங்கப்படுவதாக அவர் சொன்னார். ஏழ்மையில் வாழும் 100 மில்லியன் பேரின் வாக்குகளை சிறிய அன்பளிப்புப் பொருட்களைக் கொடுத்து பெறும் சட்டத்திற்குப் புறம்பான முயற்சியில் அரசியல் வாதிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வாக்குச் சாவடிகளுக்குச் செல் லும்போது கைத்தொலைபேசிகளை எடுத்துச் செல்லக்கூடாது. யாருக்கு வாக்களித்தேன் என்பதற்கான ஆதாரத்தைப் பெறு வதற்காக தம்மால் வாக்குச்சீட்டை வாக்காளர்கள் புகைப்படமெடுக்க லாம் என்றும் அதனால் கைத் தொலைபேசிகள் தடை செய்யப் பட்டுள்ளதாக அவர் கூறினார். தேர்தல் வன்முறை தொடர்பாக இதுவரையிலும் 15 பேர் கொல் லப்பட்டதாக தேசிய போலிஸ் தெரிவித்துள்ளது. கடைசியாக கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 வயது சிறுமி கொல்லப்பட்டார்.

அதிபர் தேர்தலையொட்டி பிலிப்பீன்ஸின் டோண்டோ நகரத் தெருக்களில் தொங்கும் தேர்தல் விளம்பரப் பதாகைகள். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!