இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தும் கொடுமை தொடர்கிறது: ஐநா கவலை

கொழும்பு: இலங்கை­யில் உள்­நாட் டுப் போர் முடி­வுக்கு வந்து ஏழு ஆண்­டு­கள் நிறை­வு­பெற்­றும் அங்கு போலி­சா­ரால் கைது செய்­யப்­படு­வோரை பாலி­யல் ரீதி­யாக துன்­பு­றுத்­தும் போக்கு தொடர்­வ­தாக ஐநா அதி­காரி ஒரு­வர் குற்றம் சாட்­டி­யுள்­ளார். ஐநா­வின் மனித உரிமை வல்­லு­ந­ரான ஜுவான் இ.மெண்­டிஸ் இலங்கைத் தலை­ந­கர் கொழும்­பில் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­ துப் பேசிய போது, போலி­சா­ரிடம் கைதா­ன­வர்­கள் சித்­தி­ர­வதை செய்­யப்­படு­வ­தற்­கான நம்பத்­த­குந்த ஆதா­ரங்கள் தன்­னி­டம் உள்­ள­தாக அவர் தெரி­வித்­தார். போர் 2009ஆம் ஆண்டு முடி­வுக்கு வந்தது. அப்­போது முதல் கைதா­ன­வர்­கள் காணா­மல் போவது, கொடுமைக்கு ஆளாக்­கப்­படு­வது போன்ற செயல்­கள் தொடர்ந்து நடந்து கொண்­டு­தான் உள்­ளன. உள்­நாட்­டுப் போரின்­போது 16.000 முதல் 22,000 பேர் வரை காணா­மல் போனது தெரிய வந்­துள்­ள­தாக மெண்­டிஸ் தெரி­வித்தார்.

பயங்க­ர­வா­தத் தடுப்­புச் சட்டம் என்ற வகை­யில் இப்­போ­துள்ள சட்ட அமைப்பு அந்­நாட்­டில் கொடு மை­கள் தொடர்­வ­தற்கு ஏது­வாக அமைந்­துள்­ள­தாக அவர் எச்­ச­ரித்­தார். அது­பற்­றிய விவ­ரங்களை அவர் வெளி­யிட்­டுள்­ளார். கைது­செய்­யப்­படும் சந்­தே­கப் பேர்­வ­ழி­களின் பாதங்களில் பிரம்பு அல்லது இரும்­புக் கம்­பி­யால் அடித்து சித்­தி­ர­வதை செய்த பின்னர் அவர்­கள் கைகளில் விலங்கு மாட்டி சில மணி நேரங்களுக்கு விடு­விப்­பர். பின்னர் மண்­ணெண்­ணெய்­யில் நனைத்த பிளாஸ்­டிக் பைகளால் முகத்தை மூடி மூச்சுத் திணறல் ஏற்படுத்துவது. கைது­செய்­யப்­பட்­ட­வ­ரின் முகத்­தி­லும் கண்­களி­லும் மிளகாய்த் தூளைத் தூவுவதோடு, பிறப்புறுப்பு களைச் சிதைத்து மிளகாய்த் தூள் போடுவது போன்ற துன்புறுத் தல்கள் இன்னும் இலங்கையில் நடப்பில் உள்ளதாகக் கூறப்படு கிறது.

சிலர் வாரக் ­க­ணக்­காக கொடு மைப்­படுத்­தப்­படு­வ­தா­க­வும் திரு மெண்­டிஸ் கூறினார். இலங்கைக்கு 9 நாட்­கள் வருகை மேற்­கொண்ட திரு மெண்­டிஸ், சிறைக் கைதி­கள் சிலரை­யும் கொடுமைப்­படுத்­தப்­பட்டு உயிர் வாழும் சிலரை­யும் சந்­தித்­தார். இலங்கை அதி­பர் மைத்­ரி­பால சிரி­சேன ஏற்­கெ­னவே உறு­தி­ய­ளித்­தது போல் மனித உரிமை மீறல்­களுக்கு ஒரு முடிவு கட்­டு­வார் என்று தாம் நம்­பு­வ­தாக திரு மெண்­டிஸ் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!