கனடாவில் காட்டுத் தீ

கனடாவின் ஃபோர்ட் மெக்முர்ரே பகுதியில் மூண்ட காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது. பல ஏக்கர் பரப்பளவில் தீப்பற்றி எரிவதாக தகவல்கள் கூறு கின்றன. சுமார் 1600 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின. அல்பெர்டா மாநிலத்தில் ஃபோர்ட் மெக்முர்ரே பகுதியில் தீ பரவி வருகிறது. 88,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட நிலையில் தீ மூண்ட ஃபோர்ட் மெக்மர்ரி பகுதியில் சிக்கிக்கொண்ட 25,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

எனினும் அவர்கள் அபாய எல்லைப் பகுதியை தாண்டவில்லை என்றும் இதனால் அவர்கள் தவிக்க நேர்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. தங்க இடமின்றி பலர் கார்களிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். காட்டுத் தீயில் எண்ணெய் வளங்கள் அதிகமாகப் பாதிக் கப்படவில்லை என்று அதிகாரி கள் கூறினர். பல நாட்களாக அப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் போராடி வருவதாகவும் அவ்வப் போது பெய்த மழை காட்டுத் தீயை அணைக்க உதவி யிருப்பதாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். காட்டுத் தீ மற்ற பகுதிகளுக்குப் பரவக் கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

ஃபோர்ட் மெக்முர்ரே அருகே காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!