சீனாவில் கனமழையும் வெள்ளப்பெருக்கும்

சீனாவின் தென்பகுதியில் உள்ள குவாங்சி மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளிலும் தெருக்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வெள்ளநீரில் சிக்கிய பல வாகனங்கள் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்களும் சுற்றுலாப் பயணிகளும் தவிக்க நேர்ந்துள்ளது. படம்: ஏஎஃப்பி