அரசியல் முறையை மாற்றியமைக்கத் திட்டம்

மணிலா: பிலிப்பீன்சில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற டாவோ நகர மேயர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே, அரசாங்கத்தின் ஆட்சி முறையை முழுமையாக மாற்றியமைக்கும் தமது திட்டம் பற்றி அறிவித் துள்ளார். அமெரிக்க பாணியிலான அரசாங்க முறையிலிருந்து நாடாளுமன்ற மற்றும் கூட்டரசு நிர்வாக முறைக்கு மாறும் அரசியலமைப்பு சட்டம் குறித்து புதிய அதிபர், மக்களின் கருத்தை அறிய விரும்புவார் என்று டுட்டர்ட்டேயின் பேச்சாளர் பீட்டர் லவினா கூறினார். பிலிப்பீன்ஸ் தென் பகுதியில் உள்ள போராளிகள் குழுக்களுடன் அமைதி உடன்பாடு செய்து கொள்வதற்கான முயற்சிகளையும் திரு டுட்டர்ட்டே மேற்கொள்வார் என்றும் அப்பேச்சாளர் சொன் னார்.

71 வயதான டுட்டர்ட்டே, தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்க குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் கூறி வரும் கருத்துகளைப் போன்று சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறிய போதிலும் அவரது பேச்சு பல வாக்காளர்களை ஈர்த்தது. சட்ட, ஒழுங்கு குறித்த அவரது கடுமையான நிலையே அவருக்கு தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்ததாகக் கூறப்படுகிறது. பிலிப்பீன்சில் டாவோ நகரில் குற்றச்செயல்களை ஒழிக்க அவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை கள் அவருக்கு மக்கள் மத்தியில் நற்பெயரை ஈட்டித் தந்தன. பிலிப்பீன்சின் பொருளியல் வளர்ச்சி கண்ட போதிலும் அந்நாட்டு மக்கள் பலர் இன்னும் வறுமை நிலையில் உள்ளனர்.

டாவோ நகர மேயர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே வாக்களித்த பின்னர் அங்கிருந்து செல்கிறார். பிலிப்பீன்ஸ் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள அவர் நாட்டின் அரசியலமைப்பு முறையை முழுமையாக மாற்றப்போவதாக அறிவித்துள்ளார். தாம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, விழித்திருக்கும்போது மட்டுமல்லாமல் தூக்கத்திலும்கூட பாடுபடப்போவதாக அவர் உறுதி அளித்துள்ளார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!