மலேசியா: ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணம் திருட்டு

கோத்தாகினபாலு: மலேசியாவில் கோத்தாகினபாலு அருகே உள்ள ஒரு சிறிய நகரில் திருடர்கள், ஒரு ஏடிஎம் எந்திரத்தை உடைத்து அதில் இருந்த 70,000 ரிங்கிட் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாகப் போலிசார் கூறினார். ஒரு வங்கிக்கு வெளியில் இருந்த ஏடிஎம் எந்திரத்தைத் திருடர்கள் பலவந்தமாக உடைப்பதற்கு நாட்டு வெடிகுண்டைப் பயன்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது.

அந்த வங்கியில் மாலை 5 மணி வரை மட்டுமே காவலாளி இருப்பார் என்றும் அதன் பிறகு பாதுகாவலர் யாரும் அங்கு இருப்பதில்லை என்றும் வங்கி அதிகாரிகள் கூறினர்.

அங்கு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் காணொளிக் கருவி மூலம் அந்தத் திருடர்களைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று காவல்துறையினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!