சர்ச்சையில் சிக்கிக்கொண்ட பிரிட்டி‌ஷ் அரசியாரும் பிரதமரும்

லண்டன்: பிரிட்டி‌ஷ் எலிசபெத் அரசியாரும் பிரிட்டி பிரதமர் டேவிட் கேமரனும் தனித்தனி நிகழ்ச்சியின்போது கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சீன அதிபர் சி ஜின்பிங் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பிரிட்டனுக்கு வந்திருந்தபோது சீன அதிகாரிகள் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதாக பிரிட்டி‌ஷ் எலிசபெத் அரசியார் கூறியது காணொளியில் பதிவாகியுள்ளது. பக்கிங்ஹம் அரண்மனை விருந்தின்போது பிரிட்டி‌ஷ் மூத்த போலிஸ் அதிகாரியிடம் அரசியார் அவ்வாறு கூறினார். இந்நிலையில் பிரிட்டி‌ஷ் பிரதமர் டேவிட் கேமரன், ஆப்கானிஸ்தானும் நைஜீரியாவும் ஊழல் மிகுந்த நாடுகள் என்று கூறியிருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி