ருமேனியாவில் அமெரிக்க ராணுவ ஏவுகணைத் தளம்

டெவெசுலு: ருமே­­­­­­­னி­­­­­­­யா­­­­­­­வில் 800 மில்­­­­­­­லி­­­­­­­யன் டாலர் செலவில் அமெ­­­­­­­ரிக்­­­­­­­கா­­­­­­­வின் ராணுவ ஏவு­­­­­­­கணைத் தளம் ஒன்று நேற்று இயக்­­­­­­­கப் பட்­­­­­­­டுள்­­­­­­­ளது. ஈராக், ரஷ்­­­யா­­­வின் ஏவுகணை முயற்­­­சி­­­களுக்கு எதிராக அமெ­­­ரிக்கா உரு­­­வாக்­­­கி­­­யுள்ள ஏவு­ கணைத் தளம் அது என்று கூறப்­ படு­­­கிறது. இந்தத் தளத்­­­தி­­­லி­­­ருந்து ஐரோப்பா வரை பாயக்­­­கூ­­­டிய ஏவு கணைகளை அமெ­­­ரிக்கா திட்ட மிட்டு வரு­­­வ­­­தா­­­கத் தெரி­­­கிறது. “ஈரான் தொடர்ந்து ஏவுகணை களை சோதித்து, மேம்படுத்தி வரு­­­கிறது,” என்றார் அமெ­­­ரிக்க ராணுவ ஆயுதக் கட்­­­டுப்­­­பாட்­­­டுப் பிரிவின் துணைச் செயலர் ஃபிராங் ரோஸ். போலாந்­தில் இறு­தி­யாக ஒரு ஏவு­கணைக்­கான தளத்­தின் நில அகழ்வை இன்று அமெ­ரிக்கா மேற்­கொள்­ளும் என்று அவர் தெரி­வித்­தார். ஜூலை மாதம் அந்தத் தளம் நேட்­டோ­வி­டம் ஒப்­படைக்­கப்­படும் என்றார் அவர்.

Loading...
Load next