மலே­சி­யா: மீண்டும் வெளிநாட்டு ஊழியர் சேர்க்கை

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்­குச் சேர்ப்­பதை நிறுத்தி வைப்பதாக அமைச்­ச­ரவை முடிவு செய்­தி­ருப்­ப­தாக மலேசிய துணைப் பிர­த­மர் அகமட் சாகிட் ஹமிடி தெரி­வித்­திருந்த நிலையில், நான்கு துறைகளில் மட்டும் இந்த விதிமுறை மீட்கப்பட்டுள்ளது என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் தெரிவித்துள்ளார். உற்பத்தி, கட்டுமானம், தோட்டம், அறைகலன் உற்பத்தித் துறைகளாகிய நான்கு துறைகளில் கடும் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நடைமுறை களை மேம்படுத்தும் சாத்தியங் களை அமைச்சரவை ஆராய்ந்து வருகிறது என்றும் அவை முறைப் படுத்தப்பட்ட பிறகு பிற துறை களிலும் வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்குச் சேர்க்கப் படுவர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.