வடகொரிய அதிகாரிகளிடம் சிக்கிய ரஷ்யப் படகு

மாஸ்கோ: ஜப்பான் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ரஷ்யப் படகு ஒன்றை வடகொரிய கடலோர காவல் படையினர் அங்குள்ள துறைமுகத்திற்கு இழுத்துச் சென்றதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்படகில் ஐந்து சிப்பந்திகள் இருந்ததாக ரஷ்யா கூறியது. வடகொரியாவின் அச்செயலுக்கு என்ன காரணம் என்பதை அறிய காத்திருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து சிப்பந்திகளையும் பிடிபட்ட படகையும் வடகொரியா உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ரஷ்யா கேட்டுக்கொண்டுள்ளது. ரஷ்யப் படகு அத்துமீறி வடகொரிய கடல் பகுதிக்குள் நுழைய வில்லை என்றும் இருந்தும் அப்படகை வடகொரிய காவல் படையினர் இழுத்துச் சென்றதற்கான காரணத்தை அறிய விரும்புவதாகவும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.