ராணுவ நடமாட்டத்தை அதிகரித்து வரும் சீனா

வா‌ஷிங்டன்: தென் சீனக் கடல் பகுதியில் சீனா அதன் செயற்கைத் தீவுகளை உருவாக்கிய பின்னர் அப்பகுதியில் அதன் ராணுவ நடமாட்டத்தை அதிகரித்து வருவ தாக அமெரிக்க தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. அப்பகுதியில் செயற்கைத் தீவுகளை கண்காணிக்கும் முறையை ஏற்படுத்துவது உள் ளிட்ட அதன் ராணுவத் திறனை சீனா அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பென்டகன் கூறியது. சீனாவின் நில மீட்புப் பணிகள் மேலும் 1,300 ஹெக்டர் நிலப் பரப்பை உள்ளடக்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. சீனாவின் மிகப் பெரிய அளவிலான நில மீட்புப் பணிகள் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முடிவுற்றன. தற்போது உள்ளமைப்பு மேம்பாட்டு வசதிகளில் சீனா கவனம் செலுத்தி வருகிறது.

சர்ச்சைக்குரிய அப்பகுதியில் நவீன போர் விமானங்கள் தரை இறங்குவதற்கு வசதியாக 3,000 மீட்டர் நீளமான மூன்று ஓடுபாதைகளை சீனா அமைக்க விருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது. இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் உள்ள ராணுவத் திறன்களே சீனாவை அதன் அணு ஆயுதங்களை நவீனமயமாக்குவதற்கு உந்து சக்தியாக இருந்துள்ளது என்று பென்டகன் தெரிவித்துள்ளது. சீனாவின் அணு சக்தி குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அமெரிக்க தற்காப்பு அமைச்சு அளித்த அறிக்கையில் இந்த விவரங்கள் கூறப்பட்டுள்ளன. அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் வளர்ந்துள்ள ராணுவத் தொழில் நுட்பங்களைத் தொடர்ந்து சீனாவும் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தி வருகிறது. அதே போல் இந்தியாவின் அணு ஆயுத சக்தியும் சீனாவின் நவீனமயமாக் கலுக்கு ஒரு உந்து சக்தியாக அமைந்துள்ளது.

தென் சீனக் கடல் பகுதியில் பெரும் பகுதிக்கு உரிமை கொண்டாடி வரும் சீனா அதன் கோரிக்கையை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் அப் பகுதியில் அதன் ராணுவ நட மாட்டத்தை அதிகரித்து வரு கிறது. அப்பகுதிக்கு சில ஆசியான் நாடுகளும் உரிமை கொண்டாடி வருவதால் அப்பிரச்சினை தொடர்பில் பதற்றம் நீடிக்கும் வேளையில் பென்டகன் இந்த அறிக்கையை வெளி யிட்டுள்ளது. இந்தியா எல்லையருகே சீனா அதன் படைகளைக் குவித்து வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் உலகின் பல பகுதிகளிலும் சீனா தன் ராணுவ பலத்தை வெளிக்காட்டி வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு சீனா ராணுவ உதவிகளை செய்து வருகிறது என்று கூறியுள்ளது அந்த அறிக்கை.

இது குறித்து கிழக்கு ஆசியாவுக்கான பாதுகாப்பு துணை உதவிச் செயலாளர் ஆப்ரகாம், செய்தியாளர்களிடம் கூறும்போது ‚"இந்திய எல்லைப் பகுதிகளில் சீனாவின் ஆயுதப் படை எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம்," என்று கூறினார். சீனாவின் இந்த நடவடிக்கைகள் எந்த அளவுக்கு பக்கத்து நாட் டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்து கிறது என்பதை சரியாகக் கணிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

தென் சீனக் கடல் பகுதியில் சீனா உருவாக்கியுள்ள செயற்கைத் தீவுகளுக்கு அருகில் சீன ராணுவத்தின் கடற்படை வீரர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சீனா அதன் ராணுவ வசதிகளை கணிசமாக அதிகரிக்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க தற்காப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் ஆசிய நாடுகளின் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்திருப்பதை சீனா கடுமையாகச் சாடியுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!