ஏமனில் ஐஎஸ் போராளிகள் தாக்குதல்: 37 பேர் மரணம்

ஏடன்: ஏமனில் ஐஎஸ் போராளிகள் நடத்திய இரு வெடிகுண்டு தாக்குதல்களில் போலிஸ்காரரர்கள் 37 பேர் உயிரிழந்ததாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏமனில் உள்ள துறைமுக நகரில் ஐஎஸ் போராளிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். போலிஸ் படையில் சேர பலர் காத்திருந்தபோது அங்கு குண்டு வெடித்ததாகவும் அந்த குண்டு வெடிப்பில் 31 பேர் உயிரிழந்ததாகவும் மற்றொரு குண்டு வெடிப்பில் 6 பேர் பலியானதாகவும் அதிகாரிகள் கூறினர். சுமார் 200,000 பேர் வசிக்கும் அந்நகரை அரசாங்கப் படையினர் அண்மையில் போராளிகளிடமிருந்து திரும்பக் கைப்பற்றினர்.