தொழிற் சாலைகளைக் கைப்பற்றப் போவதாக வெனிசுவேலா அதிபர் விடுத்த மிரட்டல்

கராகஸ்: லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் பொருளியல் நெருக்கடி காரணமாக அங்கு பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அந்தத் தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் நிக்கலஸ் மதுரோ கேட்டுக்கொண்டுள்ளார். இல்லாவிடில் அந்தத் தொழிற் சாலைகளைக் கைப்பற்றப் போவதாக அவர் மிரட்டல் விடுத் துள்ளார். உற்பத்தியைத் தொடங்கு வதற்கு மறுக்கும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

வெனிசுவேலாவில் உள்ள மிகப்பெரிய உணவு மற்றும் மதுபானம் தயாரிப்பு நிறுவனமான போலார் குரூப் அதன் உற்பத்தியை நிறுத்தியதைத் தொடர்ந்து அதிபர் இந்த மிரட்டலை விடுத்தார். கராகஸ் நகரில் அவரது ஆதர வாளர்கள் நடத்திய பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர், பொருளியல் நெருக்கடியிலிருந்து மீள உற்பத்தியைப் பெருக்க வேண்டியது அவசியம் என்று கூறினார். உற்பத்தியைப் பெருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். உற்பத்தியை நிறுத்தி நாச வேலையில் ஈடுபட விரும்புபவர் கள் நாட்டைவிட்டு அவசியம் வெளியேற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Loading...
Load next