இலங்கையில் பெருவெள்ளம், நிலச்சரிவு: எட்டுப் பேர் மரணம், ஒருவர் புதையுண்டார்

இலங்கையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பத்து மாதக் குழந்தை உள்ளிட்ட எட்டுப் பேர் பலியாகிவிட்டனர். கொழும்பு நகரில் நாடாளு மன்றக் கட்டடம் உள்ளிட்ட பகுதி களுக்குள் வெள்ள நீர் புகுந்து விடாமல் தடுக்கும் பணிகளில் ராணுவப் படையினரை அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது. மேலும் வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிக்கு கடற்படையினர் பயன் படுத்தப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் மும்முரமாக நடை பெற்று வருவதாக தற்காப்புத் துறைச் செயலாளர் கருணசேன ஹெட்டியராச்சி நேற்று ஊடகங் களிடம் தெரிவித்தார்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5,000 பேர் அப் பகுதிகளை விட்டு வெளியேற்றப் பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக பேரிடர் நிர்வாக மைய பேச்சாளர் பிரதீப் கொடிப்பிளி கூறினார். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய தங்களது வீடுகளைத் துறந்து நண்பர்கள் வீட்டிலும் உறவினர் களின் வீட்டிலும் தஞ்சம் புகுந்து உள்ளதாக அவர் குறிப்பிட்டார். தலைநகரில் உள்ள பெரும் பாலான பள்ளிக்கூடங்கள் மூடப் பட்டுள்ளன. கொழும்பு விமான நிலையத்தை நோக்கிச் சென்ற மூன்று விமானங்கள் நேற்று வேறு வழியாகத் திருப்பிவிடப்பட்டன.

நேற்று முன்தினம் தொடங்கிய மழை, கொழும்பு நகரில் பெரு வெள்ளத்தை ஏற்படுத்தியது. 24 மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தில் உள்ள தோட்டக் குடியிருப்புப் பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச் சரிவில் இருவர் உயிரிழந்தனர். பலியான எட்டுப்பேரில் இவர்களும் அடங்குவர். நிலச்சரிவில் புதையுண்ட ஒரு வரைக் காணவில்லை. நுவரெலி யா, கேகாலை, ரத்தினபுரி மாவட் டங்களில் வெள்ள அபாயம் நீடிப் பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!