இந்தோனீசியாவின் ஆட்சேபம் வரவில்லை

கடந்த ஆண்டு கடுமையான புகைமூட்டத்தை ஏற்படுத்திய காட்டுத்தீ சம்பவங்களில் தொடர் புடையதாக நம்பப்படும் இந்தோ னீசியத் தொழிலதிபர்மீது நட வடிக்கை எடுக்கும் சிங்கப்பூர் அர சாங்கத்தின் முயற்சிக்கு தனது அதிகாரபூர்வ ஆட்சேபணையைத் தெரிவித்து விட்டதாக இந்தோனீ சியா கூறியிருக்கிறது. சிங்கப்பூர் சுற்றுப்புற அமைச்சரி டம் இந்தோனீசியத் தூதர் ஆட் சேபணையைத் தெரிவித்திருப் பதாக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அர்மனாதா நசிர் ‘ஜக்கார்த்தா போஸ்ட்’டிடம் கூறினார்.

அப்படிப்பட்ட எந்த ஒரு ஆட்சேபணைக் கடிதமும் கிடைக் கப்பெறவில்லை என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு முன்னதாகக் கூறியிருந்தது. இந்நிலையில், எல்லைதாண்டிய புகைமூட்டச் சட்டத்தின்கீழ் எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் தொடர் பாக இந்தோனீசியா இம்மாதம் 6ஆம் தேதி அனுப்பியதாகச் சொல்லப்படும் ஆட்சேபணை எது வும் வந்து சேரவில்லை என்று நேற்று சிங்கப்பூரின் சுற்றுப்புற, நீர்வள அமைச்சும் தெரிவித்தது. மேலும், இம்மாதத் தொடக் கத்தில் எல்லைதாண்டிய புகை மூட்ட மாசு தொடர்பிலான 18ஆவது துணை வட்டார அமைச்சர்நிலை வழிகாட்டிக் குழு கூட்டத்தில் பங்கேற்க சிங்கப்பூர் வந்திருந்த இந்தோனீசிய அதிகாரிகள் கூட இவ்விவகாரம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும் அமைச் சின் பேச்சாளர் கூறியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புத்ராஜெயாவில் உல்லாசமாக சைக்கிளோட்டிச் செல்லும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது (முன் வரிசையில்). படம்: Chedet Official/யூடியூப்

20 Aug 2019

மலேசியப் பிரதமர் மகாதீரின் 11 கி.மீ. உல்லாச சைக்கிளோட்டம்