பேங்காக் குண்டுவெடிப்பு சந்தேக நபர்: நான் விலங்கு அல்ல

பேங்காக்: பேங்காக் குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரில் ஒருவர், செய்தியாளர்களின் கேமரா முன்பு மனமுடைந்து பேசினார். “நான் ஒன்றும் விலங்கு அல்ல,” என்று முகச்சவரம் செய் யப்பட்டு வெறுங்காலுடன் நடந்து வந்த ஏடம் காராடாக் செய்தியாளர் களிடம் தெரிவித்தார். இருவரும் நேற்று ராணுவ நீதிமன்றத்துக்கு அழைத்து வரப் பட்டனர். அப்போது பேசிய ஏடம் காராடாக், “நான் மனிதன், விலங்கு அல்ல,” என்று சொன் னார்.

நீதிமன்றத்தில் தங்கள் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச் சாட்டுகளையும் உய்கர் முஸ்லிம் களான இருவரும் மறுத்தனர். “நாங்கள் அப்பாவிகள். எங்க ளுக்கு உதவுங்கள். மனித உரிமைகள் எங்கே போனது,” என்று நீதி மன்றத்துக்கு வெளியே போலிஸ் காரிலிருந்து இறங்கிய போது மியரெய்லி கேள்வியெழுப் பினார். கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி எரவான் கோயில் குண்டுவெடிப்பில் இருபது பேர் கொல்லப்பட்டனர். 120க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்