ஹில்லரி, சாண்டர்ஸ் இறுதிக்கட்ட மோதல்

வா‌ஷிங்டன்: ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராகத் தேர்வு பெறுவதற்கு பகீரத முயற்சியில் ஈடுபட்டு வரும் பெர்னி சாண்டர்ஸ் இறுதிக் கட்டமாக கென்டக்கி, ஒரிகனில் நடைபெறும் முன் னோடித் தேர்தலில் தனது பலத் தைக் காட்டுவார் என்று கூறப்படு கிறது. ஆனால் குறிப்பிடத்தக்க பேராளர்கள் ஆதரவுடன் முன் னணியில் உள்ள ஹில்லரி கிளிண்டன் வரும் ஜூலை நிய மனத்தில் வேட்பாளராக அறிவிக் கப்படுவார் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இருவருக்கும் இடையே இரண்டு மாநிலங்களிலும் கடும் போட்டி நிலவுகிறது. உள்கட்சி வேட்பாளர் தேர்வு இறுதிக்கட்டத்தை நெருங்கியி ருப்பதால் சாண்டர்ஸ், ஹில்லரி ஆகிய இருவரும் தேர்தல் களத் தில் பிரசாரத்தை தீவிரப்படுத்தி யிருக்கின்றனர். ஏற்கெனவே கென்டக்கியில் பிரசாரத்தைத் தொடங்கிய ஹில் லரி கிளிண்டன், தமது கணவரும் முன்னாள் அதிபருமான கிளிண் டன் அமெரிக்க பொருளியலுக்கு புத்துயிரூட்டும் பொறுப்பை ஏற்பார் என்று கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்