MH370 தேடுதல் பணி ஜூலையுடன் முடிவுறும்: மலேசியா, சீனா ஒப்புதல்

ஈப்போ: ஈராண்­டு­களுக்கு முன்பு 239 பய­ணி­களு­டன் காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370ஐத் தேடும் பணி குறித்து ஆஸ்­தி­ரே­லிய போக்­கு ­வ­ரத்து பாது­காப்­புப் பிரிவு மேற்­கொள்­ளும் முடிவை ஏற்­றுக்­கொள்­ளப்போவதாக மலேசிய போக்­கு­வ­ரத்து அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது. தேடுதல் பணியை முன்­னி­ருந்து மேற்­கொள்­ளும் ஆஸ்­தி­ரே­லிய போக்­கு­வ­ரத்து பாது­காப்­புப் பிரிவின் தலைவர் ஜூலை மாதத்­துக்­குள் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றம் ஏதும் இல்லை­யெ­னில் அந்த விமா­னத்தைத் தேடும் பணியை முடித்­துக்­கொள்­ளப்போவதாக ஆஸ்­தி­ரே­லிய போக்­கு­வ­ரத்து பாது­காப்­புப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

120,000 சதுர கிலோ­மீட்­டர் பரப்­ப­ள­வில் தேடுதல் பணி முடிவடைந்­து­விட்­டால் ஆஸ்­தி­ரே­லி­யாவின் முடிவை ஏற்­றுக்­ கொள்­ளப்­போ­வ­தாக மலே­சி­யா­வின் துணைப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் அப் அஸிஸ் கப்ராவி நேற்று குறிப்­பிட்­டார். தேடுதல் பணியை மேற்­கொள்ள ஒப்­புக்­கொண்ட பரப்­ப­ள­வில் 15,000 சதுர கிலோ­மீட்­டர் பரப்­ப­ளவு மட்டுமே எஞ்­சி­யுள்­ளது. 2014ஆம் ஆண்டு காணாமல் போன அந்த விமா­னத்­தின் பாகங்கள் எதுவும் இதுவரை கண்ட­றி­யப்­ப­ட­வில்லை என ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஏபிசி செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது. இந்­தி­யப் பெருங்க­ட­லில் தேடு­வதற்­குத் தேர்ந்­தெ­டுக்­ கப்­பட்ட பரப்­ப­ளவு முழு­வ­தும் தேடப்­பட்ட பிறகு தேடுதல் பணியை முடித்­துக்­கொள்ள ஆஸ்­தி­ரே­லியா, சீனா, மலேசியா ஆகிய நாடுகள் ஏற்­கெ­னவே ஒப்­புக்­கொண்­டிருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!