இலங்கை நிலச்சரிவு: பலரைக் காணவில்லை

கொழும்பு: இலங்கையின் பெரும் பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. இவற்றில் சிக்கி குறைந்தது 37 பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் பலரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடு பட்டுள்ள நிலையில் நிலச்சரிவில் சிக்கியுள்ள சுமார் 150 பேரை உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக மீட்புக் குழுவினர் கூறினர்.

இலங்கையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் ராணுவம், போலிசார் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் வேளையில் சுமார் 300,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேறியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. படம்: ஏஎஃப்பி

Loading...
Load next