ஹாங்காங்: எதிர்பாராத விதமாக ஹாங்காங்கில் உள்ள ஒரு சாலையைக் கடந்த மூன்று வயதுச் சிறுமி சாலை விபத்திலிருந்து நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுமி சாலையைக் கடந்தபோது அந்த வழியாக இரண்டு அடுக்கு பேருந்து அச்சிறுமி மீது மோதவிருந்ததும் அதிலிருந்து தப்பிய அச்சிறுமி ஒரு டாக்சியில் மோதி கீழே விழுந்ததும் கேமராவில் பதிவாகியுள்ளது.
கீழே விழுந்த சிறுமி தானாகவே எழுந்து நடக்க ஆரம்பித்ததும் சிறுமியின் தாயும் மற்றவர்களும் சிறுமிக்கு உதவ ஓடிவந்ததாக தகவல்கள் கூறின. சாலை சந்திப்பின் மறுமுனையில் நின்று கொண்டிருந்த தன் தாயைப் பார்த்ததும் அச்சிறுமி சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்தபோது சாலையில் ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கரள் கூறினர்.