சீனாவுடன் ஆக்கபூர்வ பேச்சு நடத்த தைவானிய புதிய அதிபர் விருப்பம்

தைப்பே: தைவானின் முதல் பெண் அதிபராக பதவியேற்றுள்ள சாய் இங்க் வென், சீனாவுடன் ஆக்கபூர்வ பேச்சு வார்த்தையில் ஈடுபட விருப்பம் தெரி வித்துள்ளார். சீனாவும் தைவானும் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு இரு நாடுகளும் நன்மை அடையும் வகையில் பேச்சைத் தொடங்க வேண் டும் என்று அவர் கேட்டுக்கொண் டுள்ளார். தைவானிய அதிபராக 59 வயதான திருவாட்டி சாய் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அமைதியானவர் என்றும் உறுதியான தலைவர் என்றும் கருதப்படும் சாய், கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கட்சியை வழிநடத்தி அமோக வெற்றி பெற்றார்.

தைவானை சீனாவிலிருந்து பிரிந்து சென்ற மாநிலமாகவே சீனா கருதுகிறது. தேவைப்பட்டால் படை பலம் மூலம் தைவானை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவோம் என சீனா அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில் சீனாவிடமிருந்து தைவான் விடுதலை பெறுவதற்கு ஜனநாயக முற்போக்கு கட்சி முழு முனைப்புடன் செயல்படுகிறது. “தைவானிய மக்கள் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை காக்க உறுதிபூண்டுள்ளனர்’’ என்று சாய் தனது அறிமுக உரையில் கூறினார்.

புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட சாய் இங்க் வென் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்