வெள்ளை மாளிகைக்கு வெளியே சுடப்பட்டவரைப் பற்றிய மர்மம் நீடிப்பு

வா‌ஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வெளியே ரகசிய பாதுகாப்பு அதிகாரியால் சுடப்பட்ட வர் யாரென்ற மர்மம் நீடிக்கிறது. பொதுமக்கள் வந்து செல்லும் வாயில் எண் 17ல் கையில் துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் பிற்பகலில் அந்த ஆடவர் காணப் பட்டார். அவரை அந்த இடத் திலேயே நிற்குமாறும் துப்பாக் கியைக் கீழே போடுமாறும் அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த சீருடை அதிகாரிகள் பலதடவை உரக்கக் கத்தினர். ஆனால், அந்த உத்தரவு களுக்குக் கீழ்ப்படிய மறுத்ததால் ரகசிய பாதுகாப்புப் படை அதிகாரி அந்த ஆடவரைச் சுட்டதாகவும் துப்பாக்கித் தோட்டா அவரது வயிற்றில் பாய்ந்ததாகவும் அதி காரி ஒருவர் தெரிவித்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலை யில் ஜார்ஜ் வா‌ஷிங்டன் பல் கலைக்கழக மருத்துவமனைக்கு அந்த ஆடவர் கொண்டு செல்லப் பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மாற்றப்பட்டதும் அவரிடம் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை வட்டாரத்தைப் பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். சிறிது நேரத்திற்கு அப்பகுதியில் ஆள்நடமாட்டம் நிறுத் தப்பட்டது. சம்பவம் நிகழ்ந்தபோது துணை அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் இருந்த தாகவும் உடனடியாக அவர் பாது காப்பு வளையத்துக்குள் வைக்கப் பட்டதாகவும் ஏபிசி செய்தி நிறு வனத்திடம் போலிசார் தெரிவித் தனர்.