மலேசிய அமைச்சர் கண்டிப்பு: வர்த்தக வாகனங்களை வெளிநாட்டினர் ஓட்டக்கூடாது

பாங்கி: பேருந்து நிறுவனங்களும் லாரி நிறுவனங்களும் தங்களது வர்த்தக வாகன ஓட்டுநர் பணி களில் உள்நாட்டினரையே அமர்த்த வேண்டும் என்றும் வெளிநாட்டி னருக்கு அந்த வேலையைத் தரும் நிறுவனம் தனது உரிமத்தை இழக்க நேரிடும் என்றும் மலேசிய போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் தெரிவித்துள்ளார். “இந்த நிலையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஓட்டுநர் வேலையை மலேசியருக்கே வழங்க வேண்டும் என்று பேருந்து, லாரி நிறுவனங்களுக்கு நினைவூட்டல் அனுப்பி இருக்கிறோம்,” என்று நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறினார்.

“சுற்றுப்பயணியாக மலேசியா வருவோர் செல்லுபடியாகும் உரி மம் வைத்திருந்தால் அவர்கள் இங்கு வாகனங்களை ஓட்டலாம். என்றாலும் வர்த்தக வாகனங்கள் ஓட்ட அவர்களை அனுமதிக்கக் கூடாது,” என்று அமைச்சர் மேலும் கூறினார். வர்த்தக வாகனங்களை ஓட்டிய 116 வெளிநாட்டினர் இந்த ஆண்டு ஜனவரி முதல் பிடிபட்டுள்ளனர்.