பங்ளாதே‌ஷில் கடும் புயல்: 24 பேர் மரணம்

டாக்கா: பங்ளாதே‌ஷில் கடற்கரை பகுதியில் ரோனு புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 24 பேர் உயிரிழந் துள்ளனர் என்றும் சுமார் 500,000 பேர் புயல் காரணமாக வீடுகளைவிட்டு வெளியேறி யுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிட்டகாங் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை புயல் கரையைக் கடந்தது முதல் பல பகுதிகளில் கனமழை பெய்த தாகவும் அதனைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக வும் கூறப்பட்டது. இதனால் ஆங்காங்கே நிலச் சரிவுகள் ஏற்பட்டன. பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

தற்போது, புயலின் சீற்றம் குறைந்தாலும் இன்னும் மழை தொடர்ந்து பெய்வதாக தகவல் கள் கூறுகின்றன., பூகோள ரீதியாக தாழ்வான பகுதியில் பங்ளாதேஷ் அமைந் திருப்பதால் அங்கு அடிக்கடி வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் பல வகை புயல்களின் சீற்றங்களாலும் அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிகாரிகள் தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்துள்ளனர்.

புயலின் சீற்றம் அதிகரித்துள்ள தெற்கு சிட்டகாங் மாவட்டத்தில், உயிரிழந்தவர்களில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் அடங்குவர் என ஏஎஃ.பி செய்தி நிறுவனம் தெரி வித்துள்ளது. புயல் காரணமாக பங்ளாதே‌ஷில் பல துறைமுகங்கள் மூடப் பட்டுள்ளன. மேலும், நாடு முழுவதும் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. மொத்த சேத மதிப்பீடுகள் இதுவரை கணக் கிடப்படவில்லை என்று அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் வெள்ளநீர் நிரம்பிய சாலையைக் கடந்து செல்கின்றனர். வீடுகளைவிட்டு வெளியேறிய இவர்கள் தற்காலிக முகாம்களை நோக்கிச் செல்கின்றனர். கனமழை, வெள்ளப்பெருக்கு, புயல் இவற்றின் காரணமாக பங்ளாதே‌ஷில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!