இந்தோனீசியாவில் எரிமலை குமுறல்: 6 பேர் மரணம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சினபங் எரிமலையின் சீற்றம் காரணமாக ஆறு பேர் உயிரிழந் தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சுமத்ரா தீவில் உள்ள அந்த எரிமலையின் சீற்றம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்னும் பலர் அதனால் பாதிக் கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அந்த எரிமலை வெடித்து சிதறியதைத் தொடர்ந்து அது கக்கும் கரும் புகை சுற்று வட்டாரப் பகுதிகளை சூழ்ந்துள்ளது. எரிமலை வெடிப்பின்போது வெளியான வெப்ப வாயு மற்றும் சாம்பல் மேகத்தால் பலர் பாதிக் கப்பட்டுள்ளனர்.

எரிமலையின் சீற்றத்திற்கு 6 பேர் பலியாகிவிட்ட நிலையில் இன்னும் மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப் படுகிறது. அந்த எரிமலையிலிருந்து வெளியாகும் தீக்குழம்புகளால் மலையடிவார மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி பலர் அப்பகுதி யிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள தாக அதிகாரிகள் கூறினர். அந்த எரிமலை தொடர்ந்து குமுறக்கூடும் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அப்பகுதியில் அனல்காற்று வீசுவதால் கிராம மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எரிமலை வெடித்து சிதறியதைத் தொடர்ந்து அப்பகுதியில் கரும் புகையும் சாம்பலும் நிறைந்து காணப்படும் நிலையில் இந்தோனீசிய வீரர்களும் கிராம மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி