தாய்லாந்து: தீயில் கருகிய 17 மாணவிகள்

தாய்லாந்தின் சியாங் ராய் மாநி லத்தில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் 17 சிறுமிகள் மாண்டு போயினர். தனியார் அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் 'பிட்டகியட் விட்டயா' என்ற அந்தக் கிறிஸ் துவப் பள்ளியில் மலைவாழ் பழங்குடியினங்களைச் சேர்ந்த ஆறு முதல் 13 வயதுக்குட்பட்ட ஏழைச் சிறுமிகள் பலர் படித்து வருகின்றனர். தங்களது ஊர்களில் இருந்து அந்தப் பள்ளிக்கூடம் வெகு தூரம் என்பதால் 38 சிறுமிகள் பள்ளி விடுதியிலேயே தங்கி இருந்தனர். இந்நிலையில், இரு தளங் களைக் கொண்ட அவ்விடுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திடீரென தீப்பற்றியது.

இரவு நேரம் என்பதால் அவர் களில் பலர் தூங்கிவிட்டதாகவும் அதனால் தீயின் பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அந் நேரத்திலும் உறங்கச் செல்லாத மாணவிகள் தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஐந்து சிறுமிகள் காயமடைந்து உள்ளதாகவும் அவர்களில் இரு வரது நிலைமை கவலைக்கிட மாக இருப்பதாகவும் கூறப்படு கிறது. மேலும் இரு சிறுமியரைக் காணவில்லை என்று முதலில் கூறப்பட்டது. ஆயினும், தீயைப் பொருட்படுத்தாது அந்தக் கட்ட டத்திற்குள் துணிச்சலாகப் புகுந்த மீட்புப் படையினர் அந்த இருவரையும் உயிருடன் மீட்டனர். அந்தக் கட்டடம் மரத்தால் ஆனது என்பதால் தீயை அணைப்பது மிகச் சிரமமாக இருந்தது. மீட்புப் பணிகள் மறு நாள் காலை வரை தொடர்ந்தன. "தீ முற்றிலும் அணைக்கப் பட்டு விட்டது. இருப்பினும், கட்டடத்தில் தீ பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடந்து வருகிறது," என்று சொன்னார் வியாங் பா பாவ் மாவட்ட போலிஸ் தலைவர் கர்னல் பியாத் சிங்சின்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!