இலங்கை: நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

கொழும்பு: இலங்கை­யில் கடந்த ஒரு வாரத்­திற்­கும் மேலாகப் பெய்து வரும் வரலாறு காணாத கன­மழை­யால் கொழும்பு உள்ளிட்ட 25 மாவட்­டங்களில் கடும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள நிலையில் பல இடங்களில் ஏற்பட்ட கடுமை­யான நிலச்­ச­ரி­வினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்து உள்ளது. மிக மோசமாக பாதிக்­கப்­பட்ட காலே மாவட்­டத்­தில் நிலச்­ச­ரி­வில் சிக்கிப் புதை­யுண்ட 13 பேரின் சடலங்­களை நேற்று முன்­தி­னம் இலங்கை ராணு­வத்­தி­னர் மீட்­ட­னர். ஆரன்­யாகே பகு­தி­யில் இருந்து 43 சடலங்­கள் மீட்­கப்­பட்டு உள்­ள­தா­க­வும் பேரிடர் மேலாண்மை மையம் தெரி­வித்­துள்­ளது. 3,40,000க்கும் மேற்­பட்ட மக்கள் தங்க இட­மின்றித் தவித்து வரு­கின்ற­னர்.

வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட இலங்கைக்கு இந்தியா, பாகிஸ்­தான் உள்­ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்­க­ரம் நீட்­டி­யுள்­ளன. இந்தியா அனுப்­பிய விமா­னப்­படை விமானம், இரண்டு கடற்­படைக் கப்­பல்­கள் நேற்­று­ முன்­தி­னம் முதல் மீட்புப் பணியில் ஈடு­பட்டு வரு­கின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பு பாதிக்­கப்­பட்ட இலங்கைக்கு உறு­துணை­யா­க­வும் உதவி செய்யத் தயாராக இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­துள்­ளது. இலங்கைக்­கான ஐநா தூதர் உனா மெக்­க­வுலி இலங்கை அதிபர் மைத்­தி­ரி­பால சிறி­சேனாவைச் சந்­தித்து அவசரத் தேவைகள் குறித்து கேட்­ட­றிந்தார். இதற்கிடையே ரோனு புயலின் சீற்றத்தால் பங்ளாதே‌ஷில் ஏற்பட்ட பாதிப்புக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். 538,000 பேர் பத்திர மான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். சிட்டகாங்கில் மட்டும் 5,534 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.