சட்டவிரோதக் கும்பல் மலேசியாவில் முறியடிப்பு

கோலாலம்பூர்: சட்டவிரோதமாக கடன் கொடுத்து வந்த மிகப் பெரிய கும்பலைச் சேர்ந்த 13 பேரை கைது செய்திருப்பதாக மலேசியப் போலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் அக்கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக குற்றவியல் புலன்விசாரணைப் பிரி வின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
சிறப்புப் படை போலிசார் மே 20ஆம் தேதி மேற்கொண்ட 11 மணி நேர சோதனை நடவடிக்கையின் போது அக்கும்பலின் முக்கியப் பேர்வழி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.
சட்டவிரோதமாக அதிக வட்டிக்கு கடன் கொடுத்து வந்த அக்கும்பலின் தொல்லைக்கு ஆளான ஒருவர் போலிசாரிடம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து போலிசார் அந்த தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் கடன் முதலைகள் தன்னை மிகவும் தொல்லைப்படுத்தி வந்ததாக 48 வயதான ஒருவர் போலிசாரிடம் அண்மையில் புகார் கொடுத்ததாக போலிஸ் வட்டாரங்கள் கூறின.