அமைதி வழியில் தீர்வு காண ஒபாமா வலியுறுத்து

ஹனோய்: தென்சீனக் கடல் பகுதி தொடர்பாக நீடிக்கும் பிரச் சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.
வியட்னாம் வந்துள்ள திரு ஒபாமா, தென் சீனக் கடல் விவகாரம் குறித்துப் பேசியபோது, பெரிய நாடுகள் சிறிய நாடுகளை மிரட்டக்கூடாது என்று வலி யுறுத்தினார்.
தென் சீனக் கடலில் பெரும் பகுதிக்கு உரிமை கொண்டாடி வரும் சீனா அதன் கோரிக்கையை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் அப்பகுதியில் அதன் ராணுவ நடமாட்டத்தை அதிகரித் துள்ளது. அந்த கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடி வரும் வியட்னாம் உள்ளிட்ட நாடுகள் சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இப்பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று திரு ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.


தென் சீனக் கடல் பகுதியில் சீனா செயற்கைத் தீவுகளை உருவாக்கியுள்ளது. அத்துடன் சீனா அப்பகுதியில் நவீன ரேடார் மற்றும் ஏவுகணை தளங்களை யும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக திரு ஒபாமா, வியட்னாம் மீது விதிக்கப்பட்டிருந்த ஆயுத விற்பனைத் தடை முழுமை யாக அகற்றப்படுவதாக அறி வித்தார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த வியட்னாமிற்கான ஆயுத ஏற்றுமதி தடை இதன் மூலம் அகற்றப்படு கிறது. திரு ஒபாமா வியட்னாம் அதிபர் டிரான் டாய் குவாங்குடன் கூட்டாக செய்தி யாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

வியட்னாம் வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹனோய் நகரில் ஒரு சிறிய உணவகத்திற்குச் சென்றார். அந்தக் கடையில் நூடுல்ஸ் மிகவும் ருசியாக இருக்கும் என்பதால் திரு ஒபாமாவை இந்த உணவகத்திற்கு அமெரிக்காவின் பிரபல சமையற்காரர் அண்டனி போர்டைன் அழைத்து வந்திருக்கிறார். அண்டனியுடன் அமர்ந்து திரு ஒபாமா நூடுல்ஸ், சூப் சாப்பிடுகிறார். இந்த உணவகத்தில் அமர்ந்து ஒபாமா சாப்பிடுவதற்கு எவ்வித இட ஒதுக்கீடு மற்றும் அவரை வரவேற்பதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. ஒபாமாவை அங்கு கண்டதும் உள்ளூர் மக்கள் ஆவலுடன் ஓடிவந்து அவருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். மிகவும் சாதாரணமாக அந்த உணவகத்திற்குள் சென்ற ஒபாமா, நீல நிற பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து, உணவருந்துவதை அண்டனி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!