பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி; அமெரிக்கா நிபந்தனை

வா‌ஷிங்டன்: பாகிஸ்தானுக்கு ராணுவ மானியம் வழங்குவதற்கு அமெரிக்க செனட் குழு நிபந்தனை விதித்துள்ளது. பாகிஸ்தானுக்கு 8 போர் விமானங்களை வழங்குவதில் பல மில்லியன் டாலர் மானியம் அளிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதிநிதிகள் அவையிலும் இதைத் தடுத்து நிறுத்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே அமெரிக்க செனட் குழுவும் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானில் ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்க தற்காப்பு அமைச்சர் உத்தரவாதம் அளித்தால்தான் இந்த மானியம் வழங்கப்படலாம் என செனட் குழு நிபந்தனை விதித்துள்ளது. செனட் குழு கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தது.

Loading...
Load next