சீனாவுடன் பேச்சு நடத்தும் திட்டம் இல்லை

தைப்பே: சீனாவுடன் வர்த்தகப் பேச்சை மீண்டும் தொடங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தைவானிய புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. முதலில் சீனாவுடன் பேச்சு நடத்துவதை மேற்பார்வை யிடுவது குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஆளும் கட்சி விரும்புவதாக பொருளியல் துறை அமைச்சர் லி சி குங் கூறியுள்ளார். ஆளும் கட்சியின் அந்த உத்தேச மசோதாவை சீனா ஏற்கெனவே கடுமையாகச் சாடியுள்ளது. சீனாவுடன் பேச்சு நடத்துவதற்கு முன்னதாக அரசாங்க அதிகாரிகள் சட்ட அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்று அந்த உத்தேச மசோதா வலியுறுத்துகிறது.

தைவானின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள திருமதி சாய், சீனாவும் தைவானும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இரு நாடுகளும் நன்மை அடையும் வகையில் ஆக்ககரமான பேச்சு நடத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!