டிரம்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்; போலிசார் மீது கல்வீச்சு

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு போட்டியிட விருக்கும் குடியரசுக் கட்சியின் உத்தேச வேட்பாளரான டோனல்ட் டிரம்ப், நியூ மெக்சிகோ மாநிலத் தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றவிருந்தபோது அவரை எதிர்க்கும் ஆர்பாட்டக்காரர்கள் போலிசாருடன் மோதினர். டிரம்ப்பிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட 'டி' சட்டைகளை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.

அத்துடன் போலிசார் மீது அவர்கள் கற்களையும், பிளாஸ்டிக் போத்தல்களையும் வீசினர். ஆர்ப்பாட்டக் காரர்களைக் கலைக்க கூட்டத்தினர் மீது போலிசார் மிளகுத் தூளை பீய்ச்சி அடித்ததாகவும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாகவும் போலிஸ் வட் டாரங்கள் கூறின. பேரணி நடந்த இடத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அப்பகுதியில் போடப் பட்டிருந்த தடுப்புகளைக் கடந்து பேரணி நடந்த இடத்திற்குள் நுழைய முயன்றபோது போலி சாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலிசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியதில் போலிஸ்காரர்கள் பலர் காயம் அடைந்ததாகக் கூறப் பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரைப் போலிசார் கைது செய்தனர். பேரணி நடந்த இடத்தில் ஒன்று திரண்ட டிரம்பின் ஆதரவாளர் களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறின.

குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்ப், நியூ மெக்சிகோவில் நடந்த பேரணியில் உரையாற்றவிருந்தபோது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூக்குரல் எழுப்பினர். ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை போலிசார் அங்கிருந்து வெளியேற்றுவதை டிரம்ப் உன்னிப்பாகக் கவனிக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!