உலகப் பொருளியல் மீட்புக்கு உடனடி நடவடிக்கை தேவை

தோக்கியோ: உலகப் பொருளியல் அபாயத்தை சமாளிக்க ஜி=7 நாடு களின் தலைவர்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே வலியுறுத்தியுள்ளார். பொருளியல் மீட்புக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று திரு அபே தெரிவித்துள் ளார். தோக்கியோவில் நேற்று தொடங்கிய ஜி=7 மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்கள் உலகப் பொருளியல் மந்தம் குறித்து முக்கியமாக விவாதித்து வருகின்றனர். இந்த இரண்டு நாள் மாநாட்டில் வர்த்தகம், அரசியல், அரசதந்திர உறவு, பருவநிலை மாற்றம் பயங்கரவாதம், அகதிகள் பிரச் சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக் கப்பட உள்ளதாக தோக்கியோ தகவல்கள் கூறின. தென் சீனக்கடலில் நிலவி வரும் சூழல் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல்துறை பாதுகாப்பு குறித்தும் இந்த மாநாட்டில் தலைவர்கள் கவனம் செலுத்துவர் என்று தெரிகிறது.

சீனாவின் சர்ச்சைக்குரிய கடல்துறை சம்பந்தப்பட்ட கோரிக்கை குறித்து ஜி=7 நாடு களின் தலைவர்கள் தெளிவான, கடுமையான நிலையை அவசியம் எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய மன்றத்தின் தலைவர் டோனல்ட் டஸ்க் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் ஜப்பானின் தரமான உள்ளமைப்பு வசதி முதலீடு குறித்து திரு அபே, ஜி=7 நாடுகளின் தலைவர்களுக்கு எடுத்துரைக்கவுள்ளார். திரு அபே பிரதமாரகப் பொறுப்பேற்றது முதல் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அந்தப் பயணத்தின் போது ஜப்பானின் உள்ளமைப்பு வசதி தொழில்நுட்பத்தை அவர் பிரபலப்படுத்தி வந்துள்ளார். இத்தாலி, ஜெர்மனி. அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரக் கன்றுகளை நடுகின்றனர். ஜப்பான் நாட்டின் தலைநகர் தோக்கியோவில் ஜி=7 மாநாடு தொடங்குவதற்கு முன்பு உலகத் தலைவர்களை ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே ஜின்டோ புனித வழிபாட்டுத்தலத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்கள் அங்கு மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!