விமானத்தில் திடீர் புகை; பயணிகள் வெளியேற்றம்

தோக்கியோ: ஜப்பானின் ஹனேடா விமான நிலையத்தில் கொரியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றிலிருந்து திடீரென புகை கிளம்பியதால் பதற்றம் பரவியது. புறப்படத் தயாராக இருந்த அந்த விமானத்திலிருந்த 319 பயணிகளும் ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விமானத் தின் இடதுபுற எந்திரத்தில் கிளம்பிய புகையைக் கட்டுப் படுத்த தீயணைப்பாளர்கள் நுரையைப் பீய்ச்சும் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன.

தென்கொரியாவின் சோல் நகருக்குச் செல்ல வேண்டிய அந்த போயிங் 777 விமானத் தின் அவசர சறுக்குப் பாதைகள் நான்கும் திறந்த நிலையில் உள்ள படங்களும் காணப்பட்டன. இச்சம்பவத்தால் ஹனேடா விமான நிலையம் தற்காலிகமாக மூடும் நிலை ஏற்பட்டது. இவ்விமான நிலையத்திற்கு நாளொன்றுக்கு 550 விமானங் கள் வந்து செல்கின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தாக்குதல் நடந்த பள்ளிவாசலுக்கு முன்பு மலர்க்கொத்துகளை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் மக்கள். படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ஒற்றுமைக்கு அறைகூவல் விடுத்த நியூசிலாந்து பிரதமர்

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அருகே மலர்க்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தும் இளையர்கள். படம்: ஏஎப்பி

20 Mar 2019

நெதர்லாந்து துப்பாக்கிச் சூடு: சந்தேகப் பேர் வழி கைது