200 கிலோ போதைப்பொருள் கடத்தியதாக 14 பேர் மீது குற்றச்சாட்டு

சிட்னி: அனைத்துலகப் போதைக் கும்பலைச் சேர்ந்த 14 சந்தேக நபர்கள் மீது நேற்று ஆஸ்திரேலி யாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டது. கிட்டத்தட்ட 200 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள ‘ஐஸ்’ போதைப் பொருளைக் கடத் தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளோரில் ஆறுபேர் மலேசியர். இதர எட்டுப் பேரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் வர்த்தக மீன்பிடிப் படகின் ஊழியர்கள் என்றும் சிட்னி போலிசார் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடலோரப் பகுதியில் நேற்று முன் தினம் அந்தப் படகை அதிகாரிகள் கண்டு தடுத்து நிறுத்தினர். சில நாட்களுக்கு முன்னர் புறப்படும் போது அந்தப் படகில் போதைப் பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை என்றனர் அதிகாரிகள். அதேவேளை மேற்கு ஆஸ்திரே லியாவின் பெர்த் நகரில் 150 கிலோகிராம் போதைப்பொருள் ஓரிடத்திலும் 50 கிலோகிராம் போதைப்பொருள் மற்றோர் இடத்தி லும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட் டன. குற்றம் சாட்டப்பட்டுள்ள அனை வரும் குற்றவாளிக் கும்பலைச் சேர்ந்தவர்கள். மீன்பிடி படகு மூலம் மேற்கு ஆஸ்திரேலியாவுக்குப் போதைப்பொருள் கடத்திச் செல்ல அந்தக் கும்பல்தான் ஏற்பாடு செய் தது என்று போலிசார் கூறினார்.