மலேசியாவின் ஒரு பகுதியாக சாபா அங்கீகரிக்கப்பட்டது

கோலாலம்பூர்: குறிப்பிட்ட குழுவினர் சாபா மாநிலத்திற்கு உரிமை கொண்டாடினாலும் அம்மாநிலம் மலேசியாவின் ஒரு பகுதி என்று அனைத்துலக ரீதியில் ஏற்கெனவே ஆங்கி கரிக்கப்பட்ட ஒன்று என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரி வித்துள்ளார். பிலிப்பீன்சில் தேர்ந்தெடுக் கப்பட்ட அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே, சாபா மாநிலத்தை திரும்பப்பெற நடவடிக்கை மேற் கொள்ளப்போவதாக விடுத்த அறிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு திரு நஜிப் இவ்வாறு பதில் அளித்தார். 1963ஆம் ஆண்டிலிருந்தே சாபா, மலேசியாவின் ஒரு பகுதி என்று ஐநா அங்கீகரித்திருப்பதை திரு நஜிப் சுட்டிக்காட்டினார். இதனால் சாபாவுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று அவர் சொன்னார். இந்த விவகாரம் குறித்து சாபா முதலமைச்சர் விளக்கம் அளிப்பார் என்றும் திரு நஜிப் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!