இலங்கையில் நிலச்சரிவு; இன்னும் 100 பேரைக காணவில்லை

கொழும்பு: இலங்கையில் சென்ற வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் இன்னும் 100 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மண்ணில் புதையுண்ட பலர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 67 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக பேரிடர் நிவாரண நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இலங்கையின் பல பகுதியில் சென்ற வாரம் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் இலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளைவிட்டு வெளியேறிய 600,000 பேரில் பெரும்பாலோர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இலங்கை அரசாங்கம் அனைத்துலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி