டிரம்ப் ஆதரவாளர்களுடன் எதிர்ப்பாளர்கள் மோதல்

நியூயார்க்: அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் அந்நாட்டு குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்பின் ஆதரவாளர் களுக்கும் -எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலைத் தொடர்ந்து 35 பேரை போலிசார் கைது செய்தனர். மேற்கு கலிஃபோர்னிய மாநிலத்தில் உள்ள சாண்டியாகோ நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றி முடிந்த பின்னர் வெளியில் அவரது ஆதரவாளர் களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக போலிசார் கூறினர்.

கூட்டம் நடைபெறும் மாநாட்டு மண்டபத்திற்கு வெளியே ஒன்று கூடுவது சட்டவிரோதமானது என்று போலிசார் அறிவித்திருந்தும் அங்கு திரண்டிருந்த டிரம்பின் எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிராக கூக்குரல் எழுப்பினர். அவர்களை நோக்கி டிரம்பின் ஆதரவாளர்கள் தண்ணீர் போத்தல்களை வீசித் தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர், டிரம்பின் கொள்கைகளையும் அவர் கூறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் தான் எதிர்ப் பதாகக் கூறினார். கர்வம் மிகுந்த, சகிப்புத் தன்மை இல்லாத அவரது குணத்தை தான் எதிர்ப் பதாகவும் அவர் கூறியதாக உள்ளூர் செய்தி நிறுவனத் தகவல் கூறியது. ஆனால் டிரம்பின் ஆதரவாளர் ஒருவர், டிரம்ப்பை ஆதரித்துப் பேசியுள்ளார். டிரம்பின் கொள்கை களை தான் ஆதரிப்ப தாகவும் தொழில் அதிபர் ஒருவர் அதிபராக வருவது நாட்டுக்கு நல்லது என்று தன் தந்தை தன்னிடம் எப்போதும் கூறுவார் என்றும் அந்த ஆதரவாளர் தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சி வேட்பாளரும் தொழில் அதிபருமான டோனல்ட் டிரம்ப், சான்டியாகோ நகரில் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைத் தடுக்க போலிசார் தலையிட நேர்ந்ததாக போலிஸ் வட்டாரங்கள் கூறின. கூட்டத்தினரைக் கலைக்க போலிசார், மிளகுத் தூள் கலவையை தெளித்ததாகவும் கூறப்பட்டது. கலவரம் தொடர்பில் 35 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். அந்த மோதலின்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொருட் சேதம் எதுவும் இல்லை என்றும் போலிசார் கூறினர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!