ஹூடுட் மசோதாவுக்கு மலேசியாவில் எதிர்ப்பு

மலேசிய நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்துள்ள ஹூடுட் மசோதாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஹூடுட் மசோதா நிறைவேற்றப் பட்டால் பதவி விலகுவோம் என்று போக்குவரத்து அமைச்சர் லியோவ் டியோங் லாயும் பிரதமர் அலுவலக அமைச்சர் மா சியவ் கியோங்கும் அறிவித்துள்ளனர். சுகாதார அமைச்சரும் மஇகா எனும் மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைவருமான எஸ். சுப் பிரமணியமும் ஹூடுட் மசோதா வுக்கு எதிராகக் குரல் கொடுத்துள் ளார். பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், ஹூடுட் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் மசோ தாவை தனிப்பட்ட உறுப்பினராக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அமைச்சரவை ஒப்புதல் இல் லாமலே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.

தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்திலும் ஹூடுட் மசோதா குறித்து விவாதிக்கப்படவில்லை. இந்த நிலையில் மசோதாவுக்கு எதிராக தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சி கள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன. "ஹூடுட் மசோதாவைத் தடுத்து நிறுத்துவதற்காக அனைத்து கட்சிகளின் ஆதரவைத் திரட்டப்போகிறேன்," என்று- 'த ஸ்டார்' நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் மலேசிய சீனர் சங்கத்தின் தலை வரும் அமைச் சருமான லியோவ் சொன்னார். "இதில் தோல்வியடைந்தால் அமைச்சரவையிலிருந்து விலகு வேன்," என்றார் அவர். இத்தகைய முடிவு அரசியலில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!