700 பேர் கடலில் மூழ்கி இறந்திருக்கக்கூடும்

டிரிபோலி: மத்திய தரைக்கடல் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் மூன்று படகுகள் விபத்துக்குள்ளானதாக இத்தாலிய கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துகளில் சுமார் 700 குடியேறிகள் வரை கடலில் மூழ்கி இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக அகதி களுக்கான ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

மூன்று நாட்களில் மூன்று படகு விபத்துகள். கடந்த புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் குடியேறிகள் மற்றும் அகதிகள் பயணம் செய்த படகுகள் இத்தாலி அருகே கடலில் மூழ்கியது. ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் புகும் எண்ணத்துடன் பாதுகாப்பாற்ற படகுகளில் குடியேறிகள் பய-ணம் செய்தபோது இந்த விபத்துகள் நிகழ்ந்திருக் கின்றன. உள்நாட்டுப் போரால் பாதிக் கப்பட்ட நாடுகளிலிருந்து ஏராள மானோர் படகுகள் மூலம் சட்ட விரோதமாக ஐரோப்பாவில் குடியேற செல்கிறார்கள். படகு களில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றப்படுவதால் பல படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன.

குடியேறிகள் மற்றும் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு சிசிலி தீவுக்கு அருகே கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து இத்தாலிய கடற்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்