புதிய அதிபரின் வேலை நேரம்

மணிலா: பிலிப்பீன்சின் புதிய அதிபர் ரொட்ரிகோ டுட்டர்டே, பிற்பகல் ஒரு மணியிலிருந்து நள்ளிரவு வரை மட்டுமே வேலை செய்வேன் என்று கூறியிருக்கிறார். “எனக்கு காலை 8.00 மணி முதல் 5.00 மணி வரையிலான வேலை பற்றி கவலையில்லை,” என்றார் அவர். சொந்த ஊரான டாவோவில் திரு டுட்டர்டே இருபது ஆண்டுகளுக்கு மேலாக மேயராகப் பணி யாற்றியிருக்கிறார். இதனால் அதிபர் மாளிகை வாழ்க்கை பழகும்வரை அன்றாடம் மணிலாவிலிருந்து சொந்த ஊருக்குச் செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே நேற்று பிலிப்பீன்ஸ் நாடாளுமன்றம் அவரை அடுத்த அதிபராக அறிவித்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் திரு டுட்டர்டே பங்கேற்கவில்லை.

Loading...
Load next