ஃபலுஜா நகரை மீட்க ஈராக் ராணுவம் இறுதித் தாக்குதல்

ஐஎஸ் போராளிகளின் கோட்டை யாகக் கருதப்படும் ஃபலுஜா நகரை அவர்களின் பிடியிலிருந்து மீட்பதற்கான இறுதிக்கட்ட தாக்குதலை ஈராக் ராணுவம் முடுக்கி விட்டுள்ளது.2014ஆம் ஆண்டு ஐஎஸ் வசம் சென்ற அந்த நகரை மீண்டும் தன்வசப்படுத்தும் நோக்கில் கடந்த ஒரு வாரமாகவே ஈராக் ராணுவம் ஒருங்கிணைந்த தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அந்த நகரில் பொதுமக்கள் சுமார் 50,000 பேர் சிக்கியிருப்ப தாகவும் சில நூறு குடும்பங்கள் மட்டுமே இதுவரை அங்கிருந்து தப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அங்கு ஏற்கெனவே பலர் பட்டினியால் மாண்டுவிட்டதாகவும் தம்முடன் சேர்ந்து போரில் ஈடுபட மறுப்போரை ஐஎஸ் அமைப்பினர் கொன்று குவிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக ஐநா தெரிவித்து உள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் படையினர் உள்ளிட்ட ஈராக் ராணுவத்தினர் பல திசைகளில் இருந்து ஃபலுஜா நகருக்குள் புகுந்துள்ளதாக அரசாங்கத் தக வல்கள் கூறுகின்றன. அவர்கள் மேலும் முன்னேறாமல் தடுக்கும்விதமாக ஐஎஸ் அமைப் பினர் தற்கொலைத் தாக்குதல் களையும் கார் வெடிகுண்டுத் தாக்குதல்களையும் மேற்கொள் வதாகச் சொல்லப்படுகிறது.

மொசூல் நகருக்கு வெளியே இருந்து ஐஎஸ் நிலைகளைக் குறிவைத்து பீரங்கித் தாக்குதல் நடத்தும் ஈராக்கிய குர்தியப் படையினர். படம்: ஏஎஃப்பி

Loading...
Load next