பிரான்ஸ் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பாரிஸ்: பிரான்சில் தொழிலாளர் சட்டங்களில் கொண்டு வரப் படவுள்ள மாற்றங்களுக்கு அங் குள்ள தொழிற்சங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில் அந்நாட்டு ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்துள்ளனர். இதனால், ஏற்கெனவே எரி சக்தி பற்றாக்குறையால் பாதிக்கப் பட்டுள்ள போக்குவரத்து கட் டமைப்பு மேலும் சீர்குலையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. இந்நிலையில், பிரான்சின் பிரத மர் பிரான்சுவா ஹொலாந்து, வேலைக்கு ஆட்சேர்ப்பதையும் தேவை இல்லாத ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதையும் எளிமையாக்கும் திருத்தி அமைக் கப்பட்ட சட்டங்களை மீட்டுக் கொள்ளப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

இதேபோல், பிரான்சின் அண்டை நாடான பெல்ஜியத்திலும் பொதுத் துறை ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு போலிசார், ஆசிரியர்கள், அரசாங்க ஊழியர்கள் ஏற்கெனவே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ரயில் ஓட்டுநர்கள், சிறைக் காவலர்களுடன் சேர்ந்து வேலைநிறுத்தத்தில் இறங்கியுள் ளனர். வேலையில் பணி நேர மாற்றங் கள், ஓய்வு பெறும் வயது உயர்த்தப் பட்டது போன்ற மாற்றங்களால் அங்கு ஊழியர்கள் வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளனர். பிரான்சை பொறுத்தவரை அங்கு பெருவிரைவு ரயில் ஊழியர் களின் வேலைநிறுத்தம் நாளை தொடங்குகிறது.

ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்ற பொது தொழிலாளர் ஊழியர் சங்க கூட்டுக் குழுவின் தலைமை செயலாளர் பிலிப் மார்ட்டினெஸ் (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!