ஊனமுற்ற வாலிபருக்கு உதவிய மலேசிய காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன

பெட்டாலிங் ஜெயா: போக்குவரத்து காவலர் ஒருவர் வலியவந்து ஊன முற்ற வாலிபருக்கு உதவிய செயல் சமூக ஊடகங்களில் பரவி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தப் போக்குவரத்து காவ லரின் கருணை உள்ளத்தை ஏராளமான மலேசியர்கள் பாராட்டி யிருக்கின்றனர். தாமான் துன் டாக்டர் இஸ் மாயில் காவல் நிலையத்தைச் சேர்ந்த அவர், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சுற்றுக் காவலில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரு கால்களையும் இழந்த நிலையில் சாலையில் சென்ற ஊனமுற்ற வாலிபரை அவர் தமது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றார்.

இதனை நேரில் பார்த்துப் படம் பிடித்த முஹமட் ஷாஹ்ரின் புகைப் படங்களை சமூக ஊடங்களில் பதிவேற்றினார். "இந்தக் காட்சி எங்களுடைய மனதைத் தொட்டுவிட்டது. உதவி தேவைப்படுவோருக்கு உதவிய காவலர் ரோப்பிக்கு வாழ்த்துகள்," என்று புகைப்படங்களுக்குக் கீழ் முஹமட் ஷாஹ்ரின் குறிப்பும் எழுதியிருந்தார். இந்த சம்பவம் மலேசிய போலிஸ் தலைவர் காலித் அபு பக்கரின் கவனத்தையும் ஈர்த்துள் ளது. அந்த காவலரைப் பாராட்டிய அவர் புகைப்படங்களுடன் 'டுவிட்' செய்திருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!