மலேசியாவில் 15 குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நீக்கம்

செபாங்: மலேசிய குடிநுழைவு முறையை அமல்படுத்துவதில் முறைகேடாக நடந்துகொண்ட 15 அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் என்று மலேசிய குடிநுழைவுத் துறை நேற்றுத் தெரிவித்தது. குடிநுழைவு இயக்குநர் ஜெனரல் சாகிப் குஸ்மி, வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் ஆறு மாதங்கள் முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றி யவர்கள் என்று குறிப்பிட்டார். மேலும் 14 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்றும் எட்டு அதிகாரிகளின் சம்பளம் முடக்கி வைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

“புத்ரஜெயா தலைமையகத்திலிருந்து 63 அதிகாரிகளை வேறு இடத்துக்கு மாற்றும் கடுமையான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். விமான நிலையத்தில் பணியாற்று வதற்கு புதிய பெயர்கள் அடங் கிய பட்டியலைத் தயாரித்து வரு கிறோம்,” என்று திரு சாகிப் குஸ்மி தெரிவித்தார். குடிநுழைவு முறையில் நாச வேலையில் ஈடுபட்டதாக நம்பப் படும் மேலும் 20 அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் வைக்கப் பட்டுள்ளனர். ‘myIMMs’ என்ற குடிநுழைவு முறையில் நாச வேலை செய்த தாக நம்பப்படும் கும்பல் உறுப் பினர்கள், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் உட்பட 100 பேர் விசாரிக்கப்படுவதாக துணைப் பிரதமர் டாக்டர் அகமட் சாஹித் ஹமிடி கடந்த வாரம் கூறியிருந் தார். அதனைத் தொடர்ந்து பணிநீக்க, வேலை நீக்க நட வடிக்கை இடம்பெற்றுள்ளது.

மலேசிய காவல்துறை தலைமை இயக்குநர் சாகிப் குஸ்மி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்