ஃபலுஜாவில் சிக்கியுள்ள சிறாரை மிரட்டும் வன்முறை

பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஃபலுஜா நகரில் எறத்தாழ 20,000 பிள்ளைகள் தீவிர வன்முறைக்கு இலக்காகக் கூடும் என்று ஐ.நா.வின் சிறார் அவசரகால நிதி அமைப்பு (யூனிசெஃப்) அச்சம் தெரிவித் துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிடமிருந்து ஃபலுஜாவை மீட்க ஈராக்கியப் படை அந்நகரை சுற்றி வளைத்துள்ளது. இந்நிலையில், தங்களை எதிர்க்கும் படைகளுடன் மோத ஆள்சேர்க்கும் நோக்குடன் ஃபலு ஜாவில் உள்ள சிறாரைத் தங்களுடன் சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இறங்கலாம் என்று யுனிசெஃப் அக்கறை தெரிவித்தது.

“ஃபலுஜாவில் உள்ள சிறார், தீவிர வன்முறைக்கு ஆளாகும் அபாயம் இருக்கிறது. அவர்களது பாதுகாப்பு குறித்து நாங்கள் அக்கறை தெரிவிக்கிறோம். படை களுக்கு இடையிலான சண்டையில் ஈடுபட சிறுவர்கள் வலுகட்டாய மாகச் சேர்த்துக்கொள்ளப்படலாம் என்று அஞ்சுகிறோம். அதுமட்டு மல்லாது, சிறுவர்கள் தங்கள் குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து தவிக்கும் அவல நிலையும் ஏற்படும் சாத்தியம் உண்டு.

Loading...
Load next