அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற கலிஃபோர்னிய பல்கலைக்கழக வளாகத்தில் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியவன் என்பதை போலிசார் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் லாஸ் ஏஞ்சலிஸ் போலிசார் தீவிர சோதனை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தினர். அந்தப் பல்கலைக் கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அருகில் உள்ள பள்ளிக் கூடங்களும் மூடப்பட்டுள்ளன. படம்: ராய்ட்டர்ஸ்